வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞர் கைது

வவுனியாவில் ஹெரோயினுடன் இளைஞர் கைது

வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணிக்கும் பேருந்தில் போதைப்பொருள் எடுத்துச் செல்லப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்போது, நடத்தப்பட்ட சோதனையின் போது, 6.5 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் 39 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதானார்.

கைதானவர் இன்றைய தினம் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.