ஈரான் மீதான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீதான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நான்கு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவின் 'டெய்லி மெயில்' (Daily Mail) இதழுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை நான்கு வாரங்கள் அல்லது அதற்கும் குறைவான காலத்திலேயே நிறைவடையக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஈரான் ஒரு பெரிய நாடு என்பதால், அதன் வலிமைக்கு ஏற்ப இந்த கால அவகாசத்தை தாம் கணக்கிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் மீதான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம் : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு | Trump Says War On Iran Could Last Four Weeksஇந்தநிலையில், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவுகள் இன்னும் திறந்தே இருப்பதாகவும் தெரிவித்த ட்ரம்ப் இந்தப் பேச்சுவார்த்தைகள் விரைவில் நடைபெறுமா என்பது குறித்து தெளிவான பதிலை அளிக்கவில்லை என கூறப்படுகின்றது.

ஈரானிய தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், ஆனால் அவர்கள் கடந்த வாரமே பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.