முகக்கவசத்தின் ஊடாக கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என வலியுறுத்து!

முகக்கவசத்தின் ஊடாக கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என வலியுறுத்து!

முகக்கவசங்களை அணிவதன் மூலமாக கொரோனா  வைரஸ் தொற்றாளர்களிடம் இருந்து ஏனையோருக்கு பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஆய்வுப் பணிப்பாளர் துஷ்யந்தர மெதகெதர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் அற்ற நிலையிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

இதனால் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவௌியை பேணுமாறும், பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களில் சளியை வௌியேற்றுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.