இலங்கை வழியாக கடத்தப்படவிருந்த 15 கோடி ரூபா ஐஸ் தூத்துக்குடியில் சிக்கியது

இலங்கை வழியாக கடத்தப்படவிருந்த 15 கோடி ரூபா ஐஸ் தூத்துக்குடியில் சிக்கியது

இலங்கை வழியாக வளைகுடா நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 15 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள் தூத்துக்குடி - முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட  படகை  இந்திய தேசிய வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன் தப்பி ஓடிய படகு உரிமையாளரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடல் வழியாக இலங்கை, மாலைத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளி நாடுகளுக்கும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், கடலோர காவற்துறையினர் க்யூ பிரிவு காவல்துறையினர், இந்திய மத்திய வருவாய்ப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.