ஐ.பி.எல்: சென்னையின் அடுத்த போட்டியில் களமிறங்கும் பிறெவிஸ்?
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சனிக்கிழமை (11) நடைபெறவுள்ள டெல்லி கப்பிட்டல்ஸுக்கெதிரான போட்டியில் தென்னாபிரிக்காவின் துடுப்பாட்டவீரர் டெவால்ட் பிறெவிஸ் களமிறங்குவாரென சென்னை சுப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்க் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தோட்பட்டைக்கும் இடுப்புப் பகுதிக்குமிடையிலான உபாதை காரணமாக ஐ.பி.எல்லின் முதல் மூன்று போட்டிகளையும் பிறெவிஸ் தவறவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.