மேலும் 4 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மேலும் 4 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மேலும் நான்கு புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

நேற்று (19) கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

சுரேன் ராகவன் - உயர் கல்வி
(கல்வி சேவைகள் மற்றும் சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட சுரேன் ராகவன், உயர்கல்வி இராஜாங்க அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்)

சதாசிவம் வியாழேந்திரன் - இளைஞர் மற்றும் விளையாட்டு

சிவநேசதுறை சந்திரகாந்தன் - கிராமிய வீதி அபிவிருத்தி

மொஹமட் முஷரப் - புடவைக் கைத்தொழில், உள்ளுர் உற்பத்தி மேம்படுத்தல்