சுரேஸ் சலே - தேசபந்து தென்னகோனுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
அண்மையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையின் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பல தரப்பினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஸ் சலேயும் இன்று (12) ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், காலிமுகத்திடல் போராட்ட களத்தில் கடமையாற்றிய பாதுகாப்புப் படையின் சிரேஷ்ட அதிகாரிகள் நேற்று (11) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்ட நிலையில், மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை(13) ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறைமா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரும் நேற்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.