வன்முறை சம்பவங்கள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

வன்முறை சம்பவங்கள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

நாட்டில் சட்டவிரோத கும்பல், வன்முறைக் குழுக்கள் மற்றும் பொது / தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல் போன்ற குற்றச் செயல்கள் தொடர்பாக பின்வரும் இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, 076 739397, 011 2441146 மற்றும் 118 ஆகிய அவசர தொலைக்பேசி இலக்கங்களுக்கு அழைத்து இது போன்ற குற்றச் செயல்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.