ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்வு

ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்வு

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

பின்னர் மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம், நாளைய தினம் காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின்கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் எவரும் தங்குவதற்கு அனுமதி இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.