யாழில் திருடப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவனின் மடிக்கணினி
யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவனது மடிக்கணினி திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்றையதினம் (13) இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவன் திருநெல்வேலி பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகின்றார்.
இந்நிலையில் மாணவனின் மடிக்கணினி திருடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.