சட்ட விரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற 67 பேர் கைது
நேற்று இரவு சல்லிசம்பல்தீவு மற்றும் திருகோணமலை கடற்பகுதியில் கடற்படையினர் மற்றும் நிலாவெளி காவல்துறையினரால் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 02 முச்சக்கர வண்டிகள், ஒரு கெப் வாகனம் மற்றும் மகிழுந்து ஒன்று போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.