அரிசி விலை எதிர்வரும் சில நாட்களில் வீழ்ச்சியடையும் - அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்
சந்தையில் கடந்த காலங்களில் அதிகரித்திருந்த அரிசி விலை எதிர்வரும் சில நாட்களில் வீழ்ச்சியடையும் என அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது உள்நாட்டு அரிசியின் விற்பனை குறைவடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் டீ.கே.ரஞ்சித் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து உதவியாக நாட்டுக்கு அரிசி கிடைக்கப்பெற்றதோடு சந்தையில் அரிசி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் அரிசியின் விலை வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பிஸ்கட், சவர்க்காரம் உள்ளிட்ட மேலும் சில பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல சந்தர்ப்பங்களில் பிஸ்கட், சவர்காரம், நூடில்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விலை திருத்தி அவற்றை சந்தைக்கு அனுப்புவதற்கு குறித்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.