ஜெனீவா மனித உரிமை அமர்வு! அமரிக்க அதிகாரியை சந்தித்த தூதுவர்!

ஜெனீவா மனித உரிமை அமர்வு! அமரிக்க அதிகாரியை சந்தித்த தூதுவர்!

அமெரிக்காவின் குடியியல் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணைச் செயலாளர் உஸ்ரா சேயாவை, இலங்கையின் தூதுவர் மஹிந்த சமரசிங்க சந்தித்து உரையாடியுள்ளார்.

வோஷிங்டனில் உள்ள தூதுவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வுகளின் பின்னணியில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து துணைச் செயலாளர் உஸ்ரா சேயாவுக்கு விளக்கமளிப்பதற்காக தூதுவர் சமரசிங்கவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

சந்திப்பைத் தொடர்ந்து, துணைச் செயலாளர் சேயா வெளியிட்ட ட்விட் பதிவு ஒன்றில், அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா அளித்து வரும் ஆதரவைப் பற்றி ஈடுபாட்டுடன் கலந்துரையாடியதற்காக தெரிவித்துள்ளார்.

குடியியல் பாதுகாப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மைக்கு முக்கியமானது என்று அமெரிக்க உயர் அதிகாரி இதில் வலியுறுத்தியுள்ளார்.