மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான பரீட்சார்த்த திட்டம் விரைவில்

மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான பரீட்சார்த்த திட்டம் விரைவில்

வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்கும் வகையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரச - தனியார் கூட்டுத்திட்டமாக இதனை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

வர்த்தக நகரமான கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாக கொண்டு இலங்கை போக்குவரத்து சபையினால் மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

அதன்படி, முறையான சாத்தியக்கூறு ஆய்வின் அடிப்படையில் ஒரு பரீட்சார்த்த திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.