இம்மாதத்தின் முதல் 6 நாட்களுக்குள் 25,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு
இந்த மாதத்தின் முதல் 6 நாட்களுக்குள் சுமார் 25,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதியிலிருந்து 8ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஜீவன பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2 இலட்சத்து 34 ஆயிரத்துக்கு அதிக சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இது 9.6 சதவீத அதிகரிப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் அடிப்படையில் இலங்கையின் முதல் மூன்று ஆதார சந்தைகளாக ரஷ்யா, இந்தியா மற்றும் ஜேர்மன் ஆகியன உள்ளன.