முழு நாடுமே ஒன்றாக" தேசிய போதை பொருள் தடுப்பு நடவடிக்கை..!
முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டிற்கு இணைந்த வகையில் விஷ போதைப்பொருளை தடுப்பதற்கான கிராம மட்ட குழு உருவாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் பருத்தித்துறை பிரதேச சபை 6ம் வட்டாரமான தும்பளை j/404 கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகர் ரங்கநாதன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
போதை பொருள் தடுப்பு தொடர்பான கருத்துரைகளை பருத்துத்துறை பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு செய்யற்றிட்ட உத்தியோகத்தர் நந்தகுமார், சமுர்த்தி உத்தியோகத்தர் மிதூரன், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர் நிருபனா, பிரதேச சபை உறுப்பினர் புலோலியூர் ரமணன் பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சபேசன், ஆகியோர் வழங்கினர்.
இதில் பிரஜா சக்தி உறுப்பினர்கள், சமுக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.