கண்டியில் மற்றுமொரு யுவதி படுகொலை

கண்டியில் மற்றுமொரு யுவதி படுகொலை

கண்டியில் இளம் பெண் ஒருவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை, இலுக்வத்தை பகுதியில் 25 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் நடைபெறவிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

கண்டியில் மற்றுமொரு யுவதி படுகொலை | Young Girl Killed Sri Lanka Girls Murder

கினிஹேன மயானத்திற்கு அருகில் அவரது கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்பள்ளி ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசியிலிருந்து தரவுகளை பெற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.