வெவ்வேறு இடங்களில் தவறான முடிவால் இருவர் பலி

வெவ்வேறு இடங்களில் தவறான முடிவால் இருவர் பலி

மட்டக்களப்பில் வெவ்வேறு இடங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வந்தாறுமூலை மயானத்திலுள்ள ஈமக்கிரியைகளை நடத்தும் இளைப்பாறும் மண்டத்தில் நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (16.04.2023) பதிவாகியுள்ளது.

வந்தாறுமூலை பகுதியை சேர்ந்த கணபதிப்பிள்ளை தங்கராஜா (82 வயது) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெவ்வேறு இடங்களில் தவறான முடிவால் இருவர் பலி | Suicide Case In Batticaloa

மனைவியை பிரிந்த துயரம்

 

சித்திரைப் புத்தாண்டு தினத்தில் மனைவியின் கல்லறையைப் பார்த்து விட்டு அங்கே அமர்ந்திருந்து மனைவிக்காக ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தித்து விட்டு வரும் குறித்த முதியவர் இம்முறை மனைவியின் கல்லறையுள்ள மயானத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, செங்கலடி - ஏறாவூர் எல்லையில் அமைந்துள்ள தனியார் கட்டிடம் ஒன்றிலிருந்து ஆணொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெவ்வேறு இடங்களில் தவறான முடிவால் இருவர் பலி | Suicide Case In Batticaloa

விசாரணைகள்

 

குறித்தபகுதியை சேர்ந்த விஜயரத்ன வீரசிங்ஹ முதியான்ஸலாகே டக்ளஸ் ( 43 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் இவ்விரு சம்பவ இடங்களுக்கும் சென்ற பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளதோடு அந்தச் சம்பங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

கழுத்தில் சுருக்கிட்டு இவ்விரு தற்கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.