புதிய தாழமுக்கம் - வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை..! வெளியாகியுள்ள எச்சரிக்கை

புதிய தாழமுக்கம் - வடக்கில் கொட்டித்தீர்க்கப்போகும் கன மழை.... வெளியாகியுள்ள எச்சரிக்கை...!

இன்று முதல்(22.04.2023) எதிர்வரும் 10.05.2023 வரை அவ்வப்போது மதியத்துக்கு பின்னர் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் இந்த மழை இடியுடன் கூடிய மழையாகவே இருக்கும் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

அதே வேளை, எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தென் கிழக்கே தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை தற்போது உறுதிப்படுத்த முடியாது என அவர் கூறுகிறார்.

நாட்டின் வானிலை தொடர்பில் இன்று பதிவொன்றை இட்டு இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளார்.