மதுபோதையில் நண்பனை அடித்து கொன்ற நபர் கைது!
மினுவாங்கொடை பிரதேசத்தில் தனது நண்பனை தலைக்கவசத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்று (07) இடம்பெற்றதாக மினுவாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹொரம்பெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மது அருந்தியபோது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய அஸ்வென்ன வத்த பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.