போதைப்பொருள் வர்த்தகருடன் விருந்து - காவல்துறையினருக்கு ஏற்ட்ட நிலை!

போதைப்பொருள் வர்த்தகருடன் விருந்து - காவல்துறையினருக்கு ஏற்ட்ட நிலை!

இரவு விடுதியொன்றில் போதைப்பொருள் வர்த்தகரொருவருடன் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட, இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்களை பணி இடைநிறுத்தம் செய்ய காவல்துறை தலைமையகம் நட வடிக்கை எடுத்துள்ளது.

கடந்த (07) இரவு கல்கிசை சேரம் வீதியிலமைந்துள்ள விடுதியொன்றில் இந்த விருந்துபசாரம் நடைபெற்றது.

இதில்,விடுதியில் பணிபுரியும் பெண்ணின் தலையில் போதைப்பொருள் வர்த்தகர் கண்ணாடி குவளையால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தல்காரரை காவல்துறையின் பிடியிலிருந்து தப்பிக்க வைப்பதற்கு கான்ஸ்டபிள்கள் இருவரும் உதவி செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றம் புரிந்தவர் தப்பிச்செல்ல உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக ளில் கல்கிசை குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் கல்கிசை காவல் நிலையத் தில் கடமையாற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.