உணவக உரிமையாளர் ஒருவர் கூறிய ஆயுதத்தால் குத்தி கொலை!
கல்கிஸ்ஸை 4ம் ஒழுங்கை பகுதியில் ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உணவக உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
29 வயதான குறித்த நபரே களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்த சந்தேகநபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது தெரிவந்துள்ளதுடன் அவர்கள் தற்போது கல்கிஸ்ஸை பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர் பல சந்தர்ப்பங்களில் பலாக்காய்களை உயிரிழந்த உணவக உரிமையாளரிடம் விற்பனை செய்வதற்கு முயற்சித்திருந்த நிலையில் இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.