தோட்டப் பகுதி பெண்ணின் மரணம் - நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி..!
தோட்டப் பகுதியில் இருந்து கொழும்புக்கு வந்த பெண்ணின் மரணம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் வீடொன்றில் பணியாற்றிய நிலையில் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயதான ராஜகுமாரி என்பவர் வெலிக்கடை காவல்நிலையத்தில் நிலையத்தில் உயிரிழந்திருந்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
'குறிப்பாக தோட்டங்களை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் வறுமையால் நிர்க்கதிகளுக்கு ஆளாகியுள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் வாழக்கை கொண்டு நடத்த கொழும்புக்கு வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
நீதி நியாயம் முறையாக நிலைநாட்டப்பட வேண்டும். இது தொடர்பான சகல விசாரணைகளும் உடனடியாகவும் பக்கச்சார்பற்றதாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு இவ்வாறு வருபவர்களுக்கு நீதி நியாயம் நிலைநாட்டப்படுமா என்ற பாரிய சந்தேகம் குடிகொண்டுள்ளது. இந்த சந்தேகத்தை போக்க பக்கசார்பற்ற விசாரணையை மேற்கொள்ளவேண்டும்." என தெரிவித்தார்.