போலி குடும்பங்களாக பிரித்தானியா செல்லும் இலங்கையர்கள்...!

போலி குடும்பங்களாக பிரித்தானியா செல்லும் இலங்கையர்கள்...!

பிரித்தானியாவிற்குள் அகதி அந்தஸ்து பெற்றுக் கொள்வதற்காக இலங்கையர்கள் உள்ளிட்ட பலரும் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பிரதான ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விபரங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நெல் விவசாயி பிரித்தானியாவிற்கு செல்வதற்காக 50,000 ஸ்ரெலிங் பவுண்ட்களை முகவர் ஒருவரிடம் கொடுத்து அங்கு சென்றுள்ளார்.

கொழும்பு விமான நிலையத்தை அடைந்தபோது யாரோ தெரியாத ஒரு பெண்ணை காண்பித்து இவருக்கு கணவராக நடிக்குமாறும் யாரோ தெரியாத ஓர் சிறுவனை காண்பித்து அவருக்கு தந்தையாக நடிக்குமாறும் முகவர்கள் கூறியதாக தெரிவிக்கின்றார்.

அனேகமான சந்தர்ப்பங்களில் இவ்வாறு போலி உறவு முறைகளுடன் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்து அகதி அந்தஸ்து பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படுவதாகவும் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் இவ்வாறு மக்களை நெருக்கடிக்குள் ஆழ்த்தி விடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வழங்கப்படும் தொழில்வாண்மை விசா நடைமுறையை பயன்படுத்தி மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில் வாண்மையுடைய வீசா பெற்றுக் கொண்ட நபர், வேறும் நபர்களை தன்னில் தங்கி வாழ்பவராக நாட்டுக்குள் கடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருவரின் பெயரில் காணப்படும் வீசாவை கொண்டு அவரது மனைவி அல்லது வேறு முக்கிய உறவு எனக் குறிப்பிட்டு பெருந்தொகை பணத்தை அளவீடு செய்து, அவர்கள் பிரித்தானியாவிற்குள் அழைத்துவரப்பட்டு நிர்கதியாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழில் வாய்ப்பு ஒன்றை பெற்றுக்கொண்டு கனடாவில் நிரந்தர பதிவுரிமை பெற்றுக் கொள்ள முடியும் என்ற கனவில் தாம், வாழ்நாள் முழுவதும் உழைத்த சொத்துக்களை இவ்வாறு ஆபத்தான ஓர் முயற்சியில் முதலீடு செய்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.