50 ரூபா பணதிற்காக இடம்பெற்ற கொலை!

50 ரூபா பணதிற்காக இடம்பெற்ற கொலை!

50 ரூபா பணதிற்காக வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரத்மலானை பகுதியை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலாப்பழம் விற்பனை செய்ய வந்துள்ள நிலையில் உணவக உரிமையாளரிடம் 250 ரூபாவை தருமாறு கேட்டுள்ளார்.

உணவக உரிமையாளர் 200 ரூபாய்தான் தர முடியும் என கூறியதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றச் செயலின் பின்னர் தப்பிச் சென்ற சந்தேகநபர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.