மணமகள் மீது அமில வீச்சு தாக்குதல் - திருமண நிகழ்வன்று இடம்பெற்ற பரிதாபம்..!
வெலிகம, மதுராகொட பிரதேசத்தில் இன்று (27) நடைபெறவிருந்த திருமண வைபவத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மணமகள் மீது அமில வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் அதிகாலை 03 மணியளவில் இடம் பெற்றுள்ளது எனவும் மணமகளின் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் அமிலத்தை வீசி தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் வெலிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், தாக்குதலுக்கு உள்ளான யுவதி சில வருடங்களுக்கு முன்னர் வெலிகம மதுராகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடைய நபருடன் காதல் உறவை ஏற்படுத்தி பின்னர் பெற்றோரின் எதிர்ப்பினால் உறவை முறித்துக் கொண்டுள்ளார்.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் குறித்த இளைஞரால் அமில வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் படுகாயமடைந்த யுவதி தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குற்றவாளி அடையாள நிலையில் அவரைக் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.