மின்னல் தாக்கியதில் நபரொருவர் உயிரிழப்பு!
கந்தளாய் அக்போபுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (29) மாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அக்போபுர - படுகச்சிய பகுதியைச் சேர்ந்த முகம்மது லத்தீப் முஹம்மது மபாஸ் (36வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் கந்தளாய் பிரதேசத்தில் இடி மின்னலுடன் மழை பெய்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்போபுர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.