கார் மோதியதில் 12 வயது சிறுமி உயிரிழந்த சோகம்: கொழும்பில் சம்பவம்..!
கொழும்பு- கெஸ்பவை பிரதேசத்தில் கார் மோதியதில் 12 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (31.05.2023) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுமி தனது வீட்டிலிருந்து அருகிலுள்ள கடைக்குப் பொருட்களை வாங்கச் சென்றபோது, வீதியால் அதிவேகத்தில் வந்த கார் அவர் மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிறுமி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
காரின் சாரதியான தனியார் வங்கி ஒன்றின் முகாமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.