புறாக்கள் மூலம் மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்கும் கும்பல் - இருவர் கைது!

புறாக்கள் மூலம் மாணவர்களுக்கு போதைப்பொருள் வழங்கும் கும்பல் - இருவர் கைது!

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை கடந்த புதன்கிழமை (31) இரவு கல்முனை மாதவன் வீதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் வசம் இருந்து ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், 3 கிராமும் 170 மில்லி கிராம் ஹேரோயின் பொதி செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் வசம் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் அவை சிறு சிறு பக்கற்றுக்களில் பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்க பொதி செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீடுகளில் சிலர் வளர்ப்பு புறாக்களின் ஊடாக போதைப்பொருட்களை கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக சாய்ந்தமருது காவல்துறையினரிடம் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமையை தொடர்ந்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.