எரிபொருள் ஒதுக்கீடு முறையை இரத்து செய்ய தீர்மானம்!

எரிபொருள் ஒதுக்கீடு முறையை இரத்து செய்ய தீர்மானம்!

எரிபொருள் ஒதுக்கீடு முறை இரத்து செய்ய எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

திவுலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது கருத்து வெளியிட்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த குறித்த விடயத்தை சுட்டிகாட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

சீனாவின் சினோபெக் நிறுவனம் இந்த நாட்டில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு முறை இரத்து செய்ய எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார். 

சீனாவின் சினோபெக் நிறுவனம் மே 22 அன்று நாட்டின் எரிபொருள் சந்தையில் நுழைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.