கோழி இறைச்சியினை இறக்குமதி செய்ய நடவடிக்கை..!
வெளிநாடுகளில் இருந்து கோழி இறைச்சியினை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக இது தொடர்பான விடயங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் நிலவும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பின் பெறுபேறாக கோழி இறைச்சியினை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையே ஏற்படும்.

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு இருப்பதாகக் காண்பித்து அதனை உற்பத்தியாளர்கள் மீது சுமத்தப்பார்க்கிறார்கள்.
இன்னும் சில நாட்களுக்கு பின்னர் கட்டுப்பாட்டு விலை குறித்த வர்த்தமானியை அறிவிக்குமாறு அரசாங்க தரப்பில் இருந்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்படும்.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்ட பின்னர் கோழி உற்பத்தி அழிவடையும்.

தற்போது நிலவும் விலையினை ஆய்வு செய்து உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கால்நடை உற்பத்தித் திணைக்களம் முழுமையாக இதில் தலையிட்டு தீர்வு காணாவிட்டால் கோழிப் பண்ணைகள் நாட்டிலிருந்து காணாமல் போய்விடும்.
எனவே கோழி இறைச்சியினை இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். என குறிப்பிட்டுள்ளார்.