வாகன விபத்தில் வயோதிபத் தம்பதியர் பரிதாப மரணம்..!

வாகன விபத்தில் வயோதிபத் தம்பதியர் பரிதாப மரணம்..!

அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபத் தம்பதியர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியுடன் லொறி மோதியதில் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் நேற்றிரவு (09.06.2023) இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபத் தம்பதியினர் முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை விபத்தில் சிக்கியுள்ளனர்.

விபத்தில் 77 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலும், 75 வயதுடைய மனைவி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

வாகன விபத்தில் வயோதிபத் தம்பதியர் பரிதாப மரணம் | Two Elderly Peoples Death In Accident

இவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதியான 26 வயதுடைய இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியுடன் மோதிய லொறியின் சாரதியான 35 வயதுடைய குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.