புத்தாண்டில் அதிகரிக்கும் வாகன இறக்குமதி! விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

புத்தாண்டில் அதிகரிக்கும் வாகன இறக்குமதி! விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்காலத்தில் வாகன சந்தை நிலையான நிலையில் காணப்படும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஆர்டர் செய்யப்பட்ட வாகனங்கள் தற்போது திட்டமிட்டபடி வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டு வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக வாகன சந்தையில் சில விலை ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும், எதிர்காலத்தில் நிலைமை நிலைபெறும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புத்தாண்டில் அதிகரிக்கும் வாகன இறக்குமதி! விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | Srilanka Vehicle Price Update

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே ஆர்டர் செய்யப்படுகின்றன. அவை வழக்கம் போல் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன.

மழைக்காலத்தில் சுமார் 2 வாரங்களாக சிக்கல் நிலைமை காணப்பட்ட நிலையில், அரசாங்கம் சரியான நடைமுறைகளை மேற்கொண்டமையினால் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் வாகன விற்பனை குறைந்த மட்டத்தில் இருந்த நிலையில்,புத்தாண்டில் பலர் வாகனங்களை வாங்குவதனால் வாகன விற்பனை அதிகரித்துள்ளன.

மேலும், பலர் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்தனர். அவர்கள் வரி செலுத்தவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் தவிர்க்கப்படும். "எதிர்காலத்தில் நியாயமான விலையில் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.