
மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு - இருவர் படுகாயம்…!
மினுவாங்கொடை, பொரகொடவத்த பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
கம்பஹா தலைமையக பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
இதன்போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இருவரும், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.