கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கராத்தே வீராங்கனை...

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கராத்தே வீராங்கனை...

இந்தியாவின் புதுடில்லியில் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே சுற்றுப் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை தவராசா சானுயாவினை கௌரவித்து ஊக்கப்படுத்தும் நிகழ்வு நேற்று(26) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வாராந்த முதல்நாள் ஒன்றுகூடலைத் தொடர்ந்து இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கராத்தே வீராங்கனை | Thavarasa Sanuya Won The Bronze Medal Karateஇதன்போது குறித்த வீராங்கனைக்கு மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து உதவி மாவட்டச்செயலர் திருமதி.H.சத்தியஜீவிதா மாலை அணிவித்ததை தொடர்ந்து மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன் நினைவுக் கேடயத்தை வழங்கி மதிப்பளித்திருந்தார்.

குறித்த போட்டியில் 12 சர்வதேச நாடுகள் பங்குபெற்றிருந்த நிலையில், இலங்கை சார்பில் போட்டியிட்ட தவராசா சானுயா வெண்கலப் பதக்கத்தினை வென்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த கராத்தே வீராங்கனை | Thavarasa Sanuya Won The Bronze Medal Karate

 

மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் க.ஸ்ரீமோகனன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) ந.திருலிங்கநாதன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் வீராங்கனையினை வரவேற்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரனிடம் ஆசியினை பெற்றதுடன், தொடர்ந்து மாகாதேவா ஆச்சிரமம் முன்றலில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery