இன்றைய ராசி பலன் 18 ஏப்ரல் 2026: அனபா யோகம் – செலவுகளில் கவனம் தேவை

இன்றைய ராசி பலன் 18 ஏப்ரல் 2026: அனபா யோகம் – செலவுகளில் கவனம் தேவை

இன்று ஏப்ரல் 18, 2026 சனிக் கிழமை, பராபவ வருடம், சித்திரை மாதம் 05ம் தேதி மேஷ ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்திலும், மேஷ ராசியிலும் 3 கிரகங்களின் சேர்க்கை நடக்கிறது. இன்று கன்னி ராசியில் உள்ள உத்திரம் பின்பு அஸ்தம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சந்திர தரிசன நாள்.

 

இன்று ஏப்ரல் 18, 2026 சித்திரை மாதம் 05ம் தேதி சனிக் கிழமை, மேஷ ராசியில் அஸ்வினி பின் பரணி நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மேஷம், மீன ராசிகளில் தலா மூன்று கிரகங்களின் சஞ்சாரம் நடக்கின்றன. இதனால் இந்த ராசிகளில் திரிகிரகி யோகம் உருவாகிறது. இன்று கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. இன்று சந்திர தரிசனம், இஷ்டி காலம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அறிமுகமில்லாதவர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கலாம். அதே சமயம் சிலரின் தேவையற்ற இடையூறுகளால் உங்கள் லாபம் குறைய வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எதிர்பார்த்த வேலையை முடிக்க கடின உழைப்பு தேவைப்படும். இன்று உங்களுடைய சிந்தனை மற்றும் சிறப்பான செயல்பாடுகளால், உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். கட்டிடப் பணி அல்லது வேறு ஏதேனும் சொத்து தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுக்கு கிடைக்கும் சில செய்திகள் உற்சாகத்தை அதிகரிக்கும்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அதீத உற்சாகமும் ஆர்வமும் உங்கள் வேலையைப் பாழாக்கக்கூடும். எனவே எதை செய்தாலும் அதில் நிதானமாக செயல்படவும். இன்று உங்களுக்கு நிதிநிலை மற்றும் குடும்பம் சார்பாக கவலை ஏற்படுத்தலாம். இன்று உங்களுடைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். தேவையற்ற சந்தேகங்கள் மற்றும் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நேர்மறையற்ற வழிகளில் பணம் ஈட்டும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

மிதுனம் ராசி பலன்

மிதுனம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பச் சண்டைகள் ஏற்படலாம். உங்கள் மரியாதை அதிகரிக்கும், மேலும் நீங்கள் எதிர்பாராத ஆதாயங்களைப் பெறலாம். நிதிப் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் செயல்கள் எதிர்ப்பைச் சந்திக்கும். குடும்பப் பிரச்சினைகள் தொடர்பாகத் தவறான முடிவை எடுப்பது கடினமாக இருக்கும். உங்களுக்கு தேவையற்ற செலவுகள் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணியிடத்தில் அரசியலைத் தவிர்க்கவும்.. சில தலைமை பொறுப்பேற்க வாய்ப்பு கிடைக்கும். பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய முயற்சிக்கவும்.

கடகம் ராசி பலன்

கடகம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் செய்த கடின உழைப்பின் மூலம் விரும்பிய நற்பலனை பெறுவீர்கள். சில விஷயங்களை உங்களுடைய மன அழுத்தம் விரக்தியை ஏற்படுத்தும். நீங்கள் முடிக்கப்படாத சில பணிகளை கவனமாக முடிக்கவும். இன்று விதியின் மீது பழி சுமத்துவதை விட உங்கள் முயற்சிகளை அதிகப்படுத்துவது நல்லது. பதவி மற்றும் கௌரவத்தை பெற வாய்ப்பு உண்டு. சிலரால் குழப்பங்களையும், தேவையற்ற செலவுகளையும் அதிகரிக்கக்கூடும். இன்று உங்கள் நண்பர்கள் மூலமாக ஆதாயங்கள் பெற வாய்ப்பு உண்டு.

சிம்மம் ராசி பலன்

சிம்மம் ராசி அன்பர்களுக்கு இன்று எல்லா பணிகளையும் திட்டமிடத்திலும் முடிக்க முடியும். இன்றைய மனதிற்கு மகிழ்ச்சியை தரக்கூடிய சில நல்ல விஷயங்கள் நடக்கும். செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியம். வியாபாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பல அனுபவங்களை பெறுவீர்கள். இன்று குடும்பத்தின் பொறுப்புக்களை சரியாக நிறைவேற்ற முடியும். இன்று முதலீடு, சேமிப்பதற்கான சாதகமான சூழல் உருவாகும். அதே சமயம் பணியிடத்தில் ஒழுக்கத்தை மிக கடுமையாக பின்பற்றுவது நல்லது. இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் உங்கள் செலவுகளை அதிகரிக்க தூண்டும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று கொண்டாட்டங்கள் மற்றும் விழாக்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் அமையும். இன்று உங்களுக்கு பிடித்தமான உணவுகளை எடுத்துக் கொள்வது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயத்திலும் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களுக்கு சில நல்ல செய்திகள் தேடி வரும். அதே சமயம் புதிய திட்டங்கள், முதலீடுகள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் தொடர்பாக சில கவலை தரும் விஷயங்கள் நடக்கும். இன்று எதிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவும். நிதி சார்ந்த முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று பணியிடத்தில் உங்களுடைய சிறப்பான செயல்பாடுகளுக்காக மதிக்கப்படுவீர்கள். உங்களுடைய பிரச்சனைகள் ஒன்றும் பின் ஒன்றாக தீரும். சிலருக்கு வயிறு மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் பாதிக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் நிலை ஏற்பட்ட தன்மை ஏற்படலாம். இன்று காலத்திற்கு ஏற்ற விதத்தில் உங்களை மாற்றிக்கொள்ள முனைவீர்கள். இன்று சிலர் சில தொடர்ச்சியான செலவுகளை கூர்ந்து கவனித்து கட்டுப்படுத்துவது நல்லது.இன்று உங்கள் வேலை அல்லது தொழில் தொடர்பாக தெளிவற்ற சூழலை உணர்வீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிகம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய திருமண வாழ்க்கை அல்லது காதல் தொடர்பான வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிக்கலான பணிகளை முடிக்கவும், லாபகரமான முயற்சிகள் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. மன அழுத்தங்கள், தலைவலி போன்ற பிரச்சனைகள் தர வாய்ப்பு உண்டு. நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதிலும், நேர்மறையான எண்ணங்களுடன் செயல்படுவதிலும் கவனம் செலுத்தவும். இன்று சக ஊழியர்களுடன் இந்த விட வாக்குவாதம், மோதலையும் தவிர்க்கவும். எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் யாருக்கும் தெரியாத விதத்தில் உங்கள் வேலையை செய்து முடிப்பது நல்லது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வண்டி வாகனம் மற்றும் வீடு தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் சில நேர்முறையான செய்திகள் உங்கள் மனதிற்கு உற்சாகத்தை அதிகரிக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சில சச்சரவுகள் சந்திக்க வாய்ப்பு உண்டு. முக்கியமான முடிவுகளை அவசரமாக இருப்பதை தவிர்க்கவும். இன்று உங்களுடைய வருமானம் மற்றும் சேமிப்பை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடவும்.

மகரம் ராசி பலன்

மகரம் ராசி அன்பர்களுக்கு இன்று தைரியமாக, விடாமுயற்சியுடன் எடுக்கும் முயற்சிகள், திட்டங்கள் நல்ல பலனை தரும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்து தொடர்பான குடும்ப பிரச்சினைகள் தீர்க்க முடியும். என்ற திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் எதிர்ப்பு குறையும். நீங்கள் செய்யக்கூடிய தொழில் தொடர்பாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் உள்ளவர்கள் பணி சுமையை சந்திக்க வாய்ப்பு உண்டு. குழு பணிகளில் பொறுமையை கடைபிடிக்கவும்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி அன்பர்களுக்கு இன்று தேவையற்ற சந்தேகங்கள் அல்லது வாக்குவாதங்கள் உங்களுடைய நேரத்தையும் பணத்தையும் வீணாக்க வாய்ப்பு உண்டு. அதனால் நிதானம் மற்றும் தெளிவான சிந்தனையுடன் செயல்படவும். திட்டமிட்ட செயல்பாடு வெற்றியைத் தரும். நிதி ஆதாயத்திற்கான நல்ல வாய்ப்புகள் உண்டு. உங்கள் தாய்வழி உறவுகள் மூலம் நன்மை கிடைக்கும். உங்கள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலையை கவனமாக நிறுவகிப்பதும், குறுகிய கால இன்பங்களை விட நீண்ட காலம் பலன் தரும் விஷயத்தில் அக்கறை காட்டவும்.

மீனம் ராசி பலன்

மீனம் ராசி அன்பர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய தந்திரம் மற்றும் சாமர்த்தியமான செயல்பாடு வெற்றியைத் தரும். உங்களுடைய சிக்கல் முடிவுக்கு வரும். எதிரிகளை தோற்கடிக்கும் விதத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிலருக்கு அஜீரண தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். நிதிநிலை தொடர்பாக உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் காதல் விஷயத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். வேலையில் பணி சுமை அதிகரிக்கும். செய்து முடிக்க வேண்டியது இருக்கும்.