மதுபானங்களில் விலையும் அதிகரிப்பு...

மதுபானங்களில் விலையும் அதிகரிப்பு...

மதுபானங்களின் விலையை கலால் திணைக்களம் அதிகரித்துள்ளது.

இதன்படி அனைத்து வகையான மதுபான போத்தல் ஒன்றின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தவிர பியர் விலையும் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என்று மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உற்பத்தி செலவு அதிகரிப்பு மற்றும் மது விற்பனை குறைவினால் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில் எதிர்வரும் நாட்களில் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மதுபானங்களில் விலையும் அதிகரிப்பு(முதலாம் இணைப்பு) | Alcohol Price Up

மேலும் சுமார் 20 சதவீதம் வரி உயர்த்தப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இன்றையதினம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் சிகரெட் விலை உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.