காலைவேளை ஆராதனைக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த துயரம்..
பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல கொவ்லாவிற்கு அருகில் இன்று (2) காலை எல்ல பிரதேசத்தில் இருந்து தேவாலயமொன்றுக்கு பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாலிஎல காவல்துறையினர் தெரிவித்தனர்.
பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் பணிபுரிபவரும் எல்ல பண்டாரவளை வீதியில் வசித்து வருபவரும் எல்ல நகரில் சுற்றுலா விடுதி ஒன்றை நடத்தி வருபவருமான ரொஷான் சரீன் ஜேக்கப் (52) என்ற நபரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவரது மனைவி ஆபத்தான நிலையில் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொது வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் பாலித ராஜபக்ச தெரிவித்தார்.
எல்ல பண்டாரவளை வீதியில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் உயிரிழந்தவர் மற்றும் அவரது மனைவி இன்று (2) காலை பதுளை நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் காலை ஆராதனைக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். இதன்போதே இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.