கதிர்காமம் சென்று திரும்பிய வாகனம் விபத்து - இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...

கதிர்காமம் சென்று திரும்பிய வாகனம் விபத்து - இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி...

கதிர்காமம் யாத்திரைக்கு சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஐந்து பேரை ஏற்றிச் சென்ற குறித்த வாகனம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த ஐவரும் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த வாகனம் கதிர்காமம் சென்று திரும்பிய வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வீதியயை விட்டு விலகி விபத்து நிகழ்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

கதிர்காமம் சென்று திரும்பிய வாகனம் விபத்து - இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி | Van Accident Returning From Kadirgamam 5 Injured

இந்நிலையில், வாகனத்தில் பயணம் செய்த ஐவரும் படுகாயம் அடைந்திருந்த நிலையில் கதிர்காமம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.