இலங்கை மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் - இன்று முதல் விண்ணப்பம் கோரலாம்...

இலங்கை மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் - இன்று முதல் விண்ணப்பம் கோரலாம்...

2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பைத் தொடர்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

உரிய கடன் தொகையை பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு சார்ந்த (தொழிற்கல்வி) உயர் கல்வியை கற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் - இன்று முதல் விண்ணப்பம் கோரலாம் | Student Education Loan Application New System

அவ்வாறான 5,000 மாணவர்களிடம் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி http://www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

ஒரே நேரத்தில் மூன்று பாடங்களில் சித்தியடைந்திருத்தல், பொது அறிவு பரீட்சையில் குறைந்தபட்சம் 30 புள்ளிகளைப் பெற்றிருத்தல் மற்றும் உயர்தரம் அல்லது சாதாரண தரத்தில் ஆங்கிலப் பாடத்தில் சித்தியடைந்திருத்தல் ஆகியன குறைந்தபட்ச தகுதிகளாகும் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

5,000 மாணவர்களுக்கு கடனுதவி வழங்கப்பட உள்ளதுடன் அதனை செலுத்துவதற்கு 07 அல்லது 08 வருட கால அவகாசம் வழங்கப்பட உள்ளது.

அதிகபட்சமாக 08 லட்சம் வரை கடனாகப் பெற முடியும் என்பதோடு அதற்கான வட்டியை அரசே ஏற்கத் தீர்மானித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து 03 வருடம் அல்லது 04 வருடப் பட்டப் படிப்புகளை முன்னெடுக்க முடியும் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.