திடீரென சரிந்து விழுந்த தொலைதொடர்பு கோபுரம்! ஐவர் படுகாயம்...
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்கு உட்பட்ட தொலைதொடர்பு கோபுரம் சரிந்து விழுந்ததில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
பலத்த காற்றின் காரணமாக கந்தளாயில் நிர்மானிக்கப்பட்டிருந்த எஸ்.எல்.டி மொபிடல் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைதொடர்பு கோபுரம் இன்று(04.07.2023) முற்பகல் சரிந்து விழுந்துள்ளது.
இதன்போது அருகில் இருந்த தபால் கட்டடத்தின் மேல் சரிந்து விழுந்ததால் கடமையில் ஈடுபட்டிருந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள், கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விபரம் கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த பகுதியில் சில தொலைத்தொடர்பு சேவை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதினால் பாதுகாப்பாக செயற்படுமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பலத்த காற்று வீசியதினால் புத்தளம் நகரசபைக் கடைத் தொகுதியின் இரண்டு கடைகளின் கூரைத் தகடுகள் அல்லூண்டு சென்றுள்ளது.
இதனையடுத்து புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் புத்தளம் நகரசபை ஊழியர்கள் இனைந்து திருத்தப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.