பட்டப்பகலில் நடுவீதியில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்...

பட்டப்பகலில் நடுவீதியில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன்...

நாகலகம் தெருவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று மாலை மூன்று பேர் இளைஞன் ஒருவனை மன்னா கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளதாக கிராண்ட்பாஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெல்லம்பிட்டிய வடுல்லாவத்தை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் ஷமல் சசிந்து என்ற இருபத்தைந்து வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பட்டப்பகலில் நடுவீதியில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் | A Young Man Was Hacked To Death

இந்த இளைஞனைக் கொல்ல வந்த மூவரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.பட்டப்பகலில் நடுவீதியில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் | A Young Man Was Hacked To Death

இந்த இளைஞனைக் கொன்றுவிட்டு தப்பியோடிய மூவரைக் கைது செய்ய கிராண்ட்பாஸ் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.