கண்ணில் சத்திரசிகிச்சை செய்த இளம்தாய்க்கு நேர்ந்த துயரம் -மயக்க மருந்து காரணமா...

கண்ணில் சத்திரசிகிச்சை செய்த இளம்தாய்க்கு நேர்ந்த துயரம் -மயக்க மருந்து காரணமா...

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் பின்னர் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு கண் வைத்தியசாலையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கொட பொரலுகட்டிய தெற்கில் வசிக்கும் எச்.ஜி. ஹிமாலி பிரியதர்ஷினி வீரசிங்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த பெண்ணின் கண்ணில் இதற்கு முன்னர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் காண்டாக்ட் லென்ஸ் பொருத்தப்பட்டிருந்ததுடன், சத்திரசிகிச்சையின் பின்னர் கண்ணில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக நேற்று முன்தினம் (4) மீண்டும் கண் வைத்தியசாலை வைத்தியர்களிடம் காட்டப்பட்டார்.

வைத்தியரின் உத்தரவுக்கமைய, அதே கண்ணில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக அன்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று (5) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கண்ணில் சத்திரசிகிச்சை செய்த இளம்தாய்க்கு நேர்ந்த துயரம் -மயக்க மருந்து காரணமா | Young Mother Who Underwent Eye Surgery Diesஅறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சுயநினைவை இழந்ததாக குடும்பத்தினரின் உறவினர்கள் கூறுகின்றனர். சத்திரசிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் விஷம் கலந்ததால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.