அண்ணனை கொலை செய்த தம்பி - விசாரணைகளில் வெளியான விடயம்...

அண்ணனை கொலை செய்த தம்பி - விசாரணைகளில் வெளியான விடயம்...

பொலன்னறுவையைச் சேர்ந்த 25 வயது நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்றிரவு (06) பதிவாகியுள்ளது.

பொலன்னறுவை பெலட்டியாவவில் உள்ள அவரது வீட்டில் வைத்து இளைய சகோதரரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல் துறையினர், சாதாரணமாக சகோதரர்களுக்குள் எற்படும் சண்டையாக ஆரம்பித்த பிரச்சினை நேரம் செல்ல செல்ல வாக்குவாதமாக மாறிய நிலையில் பொறுமை இழந்த இளைய சகோதரன் தனது அண்ணனை கத்தியால் குத்தியதாக தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து காயமடைந்த நபர் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அண்ணனை கொலை செய்த தம்பி - விசாரணைகளில் வெளியான விடயம் | Younger Brother Hacks Elder Brother

குற்றவாளியான இளைய சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதற்காக சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பொது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்வது தொடர்பான விசாரணைகளை மானம்பிட்டிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.