யார் அந்தப் பெண் -காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பு...
ரயில் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் அவரை இனம் காண உதவுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த 5ஆம் திகதி ரயில் விபத்தில் காயமடைந்ததாக கூறப்படும் பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இறந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் அவர் 45 வயதுடைய அழகிய சருமம், கறுப்பு - வெள்ளை முடி மற்றும் 05 அடி 04 அங்குல உயரம் கொண்ட பெண் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை நிற மேலாடை மற்றும் வெளிர் ஊதா நிற பாவாடை அணிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது