கொழும்பில் கோர விபத்து! 5 வயது சிறுவன் பலி...

கொழும்பில் கோர விபத்து! 5 வயது சிறுவன் பலி...

 

கொழும்பு-மகரகமவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் அவரின் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வேகமாகப் பயணித்த காரும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் கோர விபத்து! 5 வயது சிறுவன் பலி | Accident In Makaragama Colombo

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 36 வயதுடைய குடும்பஸ்தரும், அவருடன் பயணித்த 5 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார்.

காரின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.