வீட்டு உரிமைக்காக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் - 26 பேர் கைது..!

வீட்டு உரிமைக்காக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் - 26 பேர் கைது..!

கொழும்பில் வீடொன்று தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 26 பேர் குருந்துவத்தை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ள குறித்த வீடு இருவருக்கும் சொந்தமில்லாததால், அதனை சொந்தமாக்கிக் கொள்வதற்காக பல சந்தர்ப்பங்களில் மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

வீட்டு உரிமைக்காக இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் - 26 பேர் கைது | Arrest Police Investigating Srilanka

நேற்று முன்தினம் (07) பிற்பகல் குறித்த பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக குருந்துவத்தை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று (08) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.