இலங்கையில் மீண்டும் வெடிக்கவுள்ள கிளர்ச்சி:வெளியான இரகசிய திட்டம்..!

இலங்கையில் மீண்டும் வெடிக்கவுள்ள கிளர்ச்சி:வெளியான இரகசிய திட்டம்..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அதிகார மையத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சியால் நாட்டை விட்டு தப்பியோடி, அடுத்த வாரத்துடன் ஒரு வருடம் நிறைவு பெறவுள்ளது.

இந்த பின்னணியில் நாட்டில் மீண்டும் கிளர்ச்சியை உருவாக்கி, நாட்டை முடக்க திட்டங்கள் போடப்படுவதாக இலங்கை புலனாய்வு திணைக்களத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறான கிளர்ச்சிகளை நடத்துவது தொடர்பான கூட்டம் ஒன்று, கடந்த வாரம் கண்டி அல்கடுவ பிரதேசத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நடத்தப்பட்டுள்ளதாகவும் உத்தேச கிளர்ச்சியின் போது இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விசேட ஆலோசனைகள் அந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.