மட்டக்களப்பில் கோர விபத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி..!

மட்டக்களப்பில் கோர விபத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி..!

மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்றையதினம்(09.07.2023) மட்டக்களப்பு - ஏறாவூர் பிரதான வீதியின் தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பாலமுனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி தன்னாமுனை பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

மட்டக்களப்பில் கோர விபத்தில் சிக்கி ஒரு வயது குழந்தை பலி | Batticaloa Accident Kills 3 Years Old Baby

இந்நிலையில் முச்சக்கரவண்டிக்குள் இருந்த ஒரு வயதும் 3 மாதம் கொண்ட குழந்தை உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காத்தான்குடி பாலமுனையைச் சேர்ந்த ஒரு வயதும் மூன்று மாதங்களுமுடைய பாத்திமா மைஸ்ஹறா எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் போது குழந்தை கீழே விழுந்ததாகவும், வீழ்ந்த குழந்தை மீது முச்சக்கரவண்டி ஏறியதையடுத்து குழந்தை உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.