கட்டுப்பாட்டை இழந்து பேருந்து தரிப்பிடத்துக்குள் புகுந்த மகிழுந்து: 6 பேர் காயம்..!
கலவானை - இரத்தினபுரி வீதியில் ஹகரங்கல பிரதேசத்தில் நேற்று பிற்பகல்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பேருந்து தரிப்பிடத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது பேருந்து தரிப்பிடத்தில் இருந்த சிலர் குறித்த மகிழுந்து மோதியதில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மகிழுந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்